வளர்ச்சி, முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்தை நோக்கமாகக் கொண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு பணியாற்றி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்ட மாநில பாஜக அலுவலகத்தைத் திறந்து வைத்த பின் பேசிய அவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நாட்டிற்கு நல்லாட்சியை கொடுத்து வருவதாகவும் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்தை நோக்கமாகக் கொண்டு பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே தனிநபர் வருமான வரிவிலக்கு அளிக்கப்பட்டதாகவும் தற்போதைய ஆட்சியில் 12 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கும் பூஜ்ஜிய வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
2014க்கு முன்பு, ஒரு குடும்பம் தினசரி தேவைகளுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவிட்டதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தற்போது வருமானவரி விலக்காலும், ஜிஎஸ்டி சீர்திருத்ததாலும் நாட்டு மக்கள் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் வரை சேமிப்பார்கள் எனப் பிரதமர் மோடி தெரிவித்தார்.