ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியை வாழ்த்தாமல் காங்கிரஸ் கட்சி மெளனம் காப்பதாகப் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரின் “சிறந்த நண்பர்” என்று விமர்சித்த பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, காங்கிரஸ் இந்தியாவின் தேசிய நலனுக்கு எதிரானது எனவும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
விளையாட்டுப் போர்க்களத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதற்காக இந்திய கிரிக்கெட் அணியை ராகுல் காந்தி இன்னும் வாழ்த்தவில்லை என்றும், காங்கிரஸ் ஏன் எப்போதும் இந்தியாவை விடப் பாகிஸ்தானை ஆதரிக்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானின் பி டீம் காங்கிரஸ் என்றும், ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் ஆப்ரேஷன் திலக் ஆகியவற்றில் காங்கிரஸ் பாகிஸ்தானுடன் துணை நின்றதாகவும் எக்ஸ் பக்கத்தில் பிரதீப் பண்டாரி பதிவிட்டுள்ளார்.