CM சார் உங்களுக்கு ஏதாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
என் வாழ்க்கையில் இது போன்ற வலியான தருணத்தை நான் சந்தித்ததே கிடையாது! மனது முகக்க வலி மட்டுமே.
இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னை பார்க்க வருகிறார்கள், அதற்கு ஒரே ஒரு காரணம் அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும் பாசமும் தான். அந்த அன்பிற்கும் பாசத்திற்கும் நான் எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதனால் தான் இந்த சுற்றுப்பயணத்தில் எல்லா விஷயங்களையும் தாண்டி, மக்களுடைய பாதுகாப்பில் எந்த பாரபட்சமும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக தான், என் மனதிற்குள் ஆழமாக அதனை நினைத்து கொண்டிருப்பேன்.
அதனால்தான் இந்த அரசியல் காரணங்கள் எல்லாவற்றையும் தவிர்த்து ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களுடைய பாதுகாப்பை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, அதற்கான இடங்களை தேர்வு செய்வது, அதற்காக இடங்களில் அனுமதி வாங்குவது, காவல்துறையில் தயவு கூர்ந்து கேட்போம். “ஆனால் நடக்கக்கூடாது ஒன்று நடந்து விட்டது.”
நானும் மனிதன்தானே, அந்த நேரத்தில் அத்துனை பேர் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் பொழுது அந்த ஊரை விட்டு எப்படி புறப்பட்டு என்னால் வர முடியும்?
நான் திரும்பவும் அங்கே செல்ல வேண்டும் என்ற சூழல் இருந்தால் அதனை காரணம் காட்டி, வேறு சில பதட்டமான சூழல்கள் மற்றும் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் அதனை தவிர்த்தேன்.
இந்த நேரத்தில் சொந்தங்களை இழந்து தவிக்கின்ற அத்தனை குடும்பங்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்! என்ன சொன்னாலும் இது ஈடு ஆகாது என்று எனக்குத் தெரியும்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரக்கூடிய அனைவரும் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறேன்!
“கூடிய விரைவில் உங்கள் எல்லோரையும் நான் சந்திக்கிறேன்.”
இந்த நேரத்தில் எங்களுடைய வலிகளை எங்களுடைய நிலைமையை புரிந்து கொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சிகளை சார்ந்த நண்பர்கள் தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
“கிட்டத்தட்ட ஐந்து மாவட்டங்களுக்கு பிரச்சாரத்திற்கு சென்றிருக்கிறோம். எங்கேயும் இது போன்ற நடக்கவில்லை ஆனால் கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?”
மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்!
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!.
கரூரை சேர்ந்த மக்கள் உண்மைகள் எல்லாம் வெளியே சொல்லும் போது கடவுளே நேரில் வந்து உண்மைகளை எல்லாம் சொல்வது போல தோன்றியது.
சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும். எங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் நாங்கள் எங்கள் பரப்புரையை நிகழ்த்தினோம். மற்றபடி நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.
ஆனால் இருந்தாலும் எங்கள் கட்சியை சேர்ந்த சகோதரர்கள் தோழர்கள் மீது வழக்குப்பதிவு, அது மட்டும் இல்ல சமூக வலைத்தளத்தில் இருக்கும் நண்பர்கள் தோழர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய பட்டிருக்கிறது
“CM சார் உங்களுக்கு ஏதாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.”
“அவர்கள் மீது கை வைக்காதீர்கள்”
“நான் ஒன்று வீட்டில் இருப்பேன், அல்லது அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ”
நண்பர்களே தோழர்களே நம்மளுடைய அரசியல் பயணம் இன்னும் பலமாக, தைரியத்துடன், தொடரும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.