நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? - எச்சரிக்கும் நிபுணர்கள்!
Nov 15, 2025, 05:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? – எச்சரிக்கும் நிபுணர்கள்!

Web Desk by Web Desk
Oct 1, 2025, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – காசா, தென்கொரியா – வடகொரியா, தாய்லாந்து – கம்போடியா என ஒவ்வொரு நாடும் மற்றொன்றை முறைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒருவேளை மூன்றாம் உலகப்போர் வந்தால், அதிநவீனத்துவம் கொண்ட ஏவுகணைகள்தான் காரணமாக இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அது எப்படி தற்போ பார்க்கலாம்..

சர்வதேச அளவில் உலகப்போர் தொடங்கிய காலத்தில் இருந்து, ஏவுகணைகள் ஒருநாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றி வருகின்றன… ஆனால் தற்போதைய புதிய தலைமுறை ஏவுகணைகள் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளளது… நிகழ்கால ஏவுகணைகள் அதிவேகம் கொண்டதோடு, துல்லியத்தன்மை மிக்கதாகவும், ரேடாரில் இருந்து மறைந்து கொள்ளும் திறனையும் பெற்றுள்ளன.

சில ஏவுகணைகள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனை கொண்டிருப்பதால், எந்த வகையான தாக்குதல் என்பதையே கண்டறிவது கடினமாகிவிட்டது….. இந்த நிச்சயமற்ற தன்மை மிகவும் ஆபத்தானது என்று கூறும் நிபுணர்கள், ஒரு ஏவுகணை ஏவப்படும் பட்சத்தில், அதற்கு மற்றொரு நாடு இடைமறிக்க, அல்லது திருப்பித்தாக்கச் சிலல நிமிடங்கள் மட்டுமே இருக்கக்கூடும் என்றும், அது குறுகிய எதிர்வினையாற்றும் நேரம் தவறாகக் கணக்கீட்டால் அபாயத்தை அதிகரித்துவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

இது உலகை மிகப்பெரிய தாக்குதலைநோக்கித் தள்ளக்கூடியது. புதிய தலைமுறை ஏவுகணை அமைப்பானது, பாதுகாப்பு கவசஅமைப்புகளைத் தகர்த்தெறியும் வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஏவுகணைகளும் பல போர்முனை சவால்களுக்கு ஏற்ற வகையிலும், தனித்தனிஇலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறனுடனும் உருவாக்கப்படுகின்றன.

இதன் காரணமாக அதிநவீன பாதுகாப்பு கவச அமைப்புகள் கூட புதிய தலைமுறைஏவுகணைகளைத் தடுக்கக போராட வேண்டியதிருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஏவுகணைகளின் சிறப்பு அம்சங்களும், திறன்களும் முதலில்தாக்குதலைத் தொடங்கும் நாடுகள், எதிர் தாக்குதலிருந்து தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கின்றன. சர்வதேச நாடுகள் மத்தியில் நிலவும் ஆயுதப்போட்டி, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்று உலகளாவிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா, சீனா, வடகொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் மேம்பட்ட ஏவுகணை அமைப்புகளை பரிசோதித்து வருகின்றன. ஒவ்வொரு நாடும் இந்த ஆயுதங்கள் தற்காப்புக்கானவை என்று காரணத்தை கூறினாலும், நடைமுறையில் அவை சந்தேகத்தையே கிளப்புகின்றன. எனினும் ஆயுதப் போட்டியில் பெரும்பாலான நாடுகள் இணையும்போது, அது தவறு நிகழுவதற்கான வாய்ப்பை குறைக்கின்றன என்கிறார்கள் நிபுணர்கள்.

அரசியல் பதற்றம், உக்ரைன் போர் தொடங்கி, தென்சீனக் கடல், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் சர்ச்சைகள் வரை, குறிப்பிட்ட நாடுகளை மோதலைநோக்கித் தள்ளுகின்றன. ஹைபர் சோனிக் ஏவுகணைகள் நம்ப முடியாத வேகத்தைவேகத்தைக் கொண்டுள்ளன. ஒலியின் வேகத்தைவிட குறைந்தது 5 மடங்குவேகமாகப் பயணிக்கின்றன.

ஒலியின் வேகம் மணிக்கு ஆயிரத்து 225 கிலோ மீட்டர் வேகத்தைக் கொண்டிருக்கும் நிலையில், ஹைபர் சோனிக் ஏவுகணைகள் மணிக்கு ஆறாயிரம் கிலோ மீட்டர் பாய்ச்சலை வெளிப்படுத்துகின்றன… ஹைபர்சோனிக் ஏவுகணைகளின் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று, HGVs எனப்படும் Hypersonic Glide Vehicles. இதுராக்கெட்டுகள் மூலம் விண்வெளியில் பறந்து, பின்னர் வளிமண்டலத்தில் தங்களை நோக்கிச் சறுக்கிச் செல்கின்றன. கணிக்க முடியாத பாதைகளில் தாழ்வாகவும், அதிவேகமாகவும் இலக்கைநோக்கிப் பாய்வதால், கண்காணிப்பதோ, இடைமறிப்பதோ கடினமாகிறது.

மற்றொன்று HCMs எனப்படும் Hypersonic Cruise Missiles. இவை ஏவப்பட்ட இடத்தில் இருந்து இலக்கை நோக்கி வளிமண்டலத்திற்குள் வேகமாகப் பறக்க scramjets என்ற சிறப்பு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன. இலக்கை நோக்கிப் பாயும் போது தற்காப்புக்காகத் திசையை மாற்றிக் கொள்ளவும், மறைந்திருக்க குறைவான உயரத்தில் பறக்கவும் முடியும். குறிப்பாக MACH-8 ஹைபர்சோனிக் ஏவுகணைகளால் சில நிமிடங்களில் இலக்கை அடைய முடியும். இதைக் கண்டறியவோ அல்லது எதிர்வினையாற்றவோ நேரமிருக்காது.

இது போன்ற ஏவுகணைகள் பாதுகாப்பு கவச அமைப்புகளைப் பெரும்பாலும் சட்டை செய்வதே இல்லை என்பது கூடுதல் சிறப்பம்சம்… தற்போதைய கவலைக்கான அறிகுறிகள் என்னவென்றால், தைவானில், இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள இலக்குகளைக் குறிவைக்கக்கூடிய Dark Eagle போன்ற ஏவுகணைகளை அமெரிக்கா பரிசோதித்து வருகிறது. சீனா இவற்றை அச்சுறுத்தலாகப் பார்ப்பதால், தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. உலகத் தலைவர்கள் ஏவுகணைகளைப் பற்றி முன்னெப்போதையும்விட அதிகமாகப் பேசி வருகின்றனர்.

அதிநவீன ஏவுகணைகள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், எதிரிகளை அச்சுறுத்தவும் பயன்படும் என்று நம்புகிறார்கள். மேலும் புதிய தலைமுறை ஏவுகணைகள் அதிவேகமானவை, தொலைதூரம் பறக்கக் கூடியவை, சில சமயங்களில் அவற்றை நிறுத்துவது சாத்தியமற்றது என்பதால், ஒருவேளை மூன்றாம் உலகப்போர் தொடங்கினால், அது இவ்வகை ஏவுகணைகளால் இருக்கலாம் என்று பல நிபுணர்கள் நம்புகின்றனர்.

உலகம் முழுவதும் மிகவும் ஆபத்தானவை என மூன்று ஏவுகணைகளை நிபுணர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலும் சாத்தான்-2 என்ற அழைக்கப்படும் ரஷ்யாவின் RS-28 Sarmat, சீனாவின் DF-41 மற்றும் அமெரிக்காவின் Dark Eagle ஆகிய மூன்று ஹைபர்சோனிக் ஏவுகணைகள்தான் மிகவும் ஆபத்தானவை என்று நிபுணர்கள் வரையறுத்துள்ளனர்.

ரஷ்யா இதுவரை உருவாக்கிய ஏவுகணைகளிலேயே மிகப்பெரியது RS-28 Sarmat. 200 டன்னுக்கும் அதிகமான எடைகொண்ட இந்த ஏவுகணை நிலத்திற்கு அடியில் மறைக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏவப்படுகிறது. 10-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை வெவ்வேறு நகரம், வெவ்வேறு நாடுகளை இலக்காகக் கொள்ளும் திறன் பெற்றவை… 30 நிமிடங்களுக்குள் உலகின் எந்த மூலையையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை, எந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பும் நிறுத்த முடியாது என்று ரஷ்யா கூறுகிறது… ஹிரோசிமாவில் வீசப்பட்டதைப் போன்று, 50 மடங்கு சக்தி வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகை கவலையடையச் செய்யும் மற்றொரு ஏவுகணை சீனாவின் DF-41… ஒலியின் வேகத்தை விட 25 மடங்கு அதிகம். 10 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, பூமியில் உள்ள எந்தவொரு இலக்கையும் தாக்கும் அளவுக்கு தொலைதூரம் பயணிக்கக் கூடியது. பெரிய லாரிகளில் நகர்த்தப்படும் வசதி கொண்டிருப்பதால், கண்டுபிடிப்பதும், எதிர்வினையாற்றுவது கடினம்.

இந்த ஏவுகணை அமெரிக்க நகரங்களுக்கு அச்சுறுத்தலாக என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் டார்க் ஈகிள் ஏவுகணை மிகவும் மேம்பட்ட ஏவுகணையாக பார்க்கப்படுகிறது. ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஏவுகணை 1700 மைல் தூரத்தில் உள்ள இலக்கை 30 நிமிடங்களில் தாக்கவல்லது. நகரும் தன்மை கொண்ட இந்த ஏவுகணை, ஏவுகணை எதிர்ப்புத் தளங்கள், போர்க்கப்பல்களை விரைந்து சென்று தாக்கக் கூடியது. அதே நேரத்தில் எதிர்வினையாற்றுவதற்கு சிறிய எச்சரிக்கைக் கூட எதிரிக்குக் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

2025ம் ஆண்டில், பல நாடுகள் ஆபத்தான ஏவுகணை அமைப்புகளை உருவாக்கியுள்ளன. இந்த ஏவுகணைகள் பதற்றங்களை அதிகரிக்கக் கூடும் என்றும், உலகளாவிய மோதலைத் தூண்டக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ரஷ்யாவின் RS-26 Rubezh எனப்படும் Oreshnik ஹைபர்சோனிக் ஏவுகணை ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பாய்ச்சலை கொண்டுள்ளது. நேட்டோ எல்லைகளுக்கு அருகில் உள்ள பெலாரஸில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இது ஐரோப்பாவிற்கு நேரடி அச்சுறுத்தலாக நேட்டோ கருதுகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் சீனாவின் DF-61 ஏவுகணை 42 கிலோ மீட்டர் தொலைவை சென்று தாக்கக் கூடியது. MACH 55 வேகத்தில் அதாவது மணிக்கு 67 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாயக்கூடியது. இது அமெரிக்க ஏவுகணை குழிகளைக் குறிவைக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வடகொரியாவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் திறன் கொண்ட Hwasong-19 ஏவுகணை, கிழக்கு ஆசியாவில் பதற்றங்களை அதிகரிக்கிறது.

ஈரானின் Shahab-3 என்ற இடைநிலை தூரம் கொண்ட ஹைபர் சோனிக் ஏவுகணை அணு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு 2000 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக் கூடியது. இந்தியாவின் அக்னி-பி ஏவுகணை நடுத்தர தூர ஏவுகணை. இது பல அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடியது. ஒரே நேரத்தில் பல இடங்களை குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது. இவற்றில் டார்க் ஈகிள், சர்மட் மற்றும் DF-41 போன்ற நவீன ஏவுகணைகள் மிக வேகமானவை மற்றும் கணிக்க முடியாதவை. ரேடார்களை ஏமாற்ற டிகோய்களைப் பயன்படுத்தலாம் அல்லது பெரும்பாலான பாதுகாப்பு அமைப்புகள் சரியான நேரத்தில் செயல்பட முடியாத அளவுக்கு உயரமாகவும் வேகமாகவும் பறக்கலாம்.

ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான இந்த ஏவுகணைகளை ஏவினால், சில ஏவுகணைகள் உள்ளே நுழைந்து பெரும் அழிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஏவுகணை சோதனைகள், ராணுவப் பயிற்சிகள், உக்ரைன், தைவான் மற்றும் மத்திய கிழக்கு போன்ற இடங்களில் அதிகரித்து வரும் பதற்றம் ஆகியவை நிலைமையை இன்னும் ஆபத்தானவையாக மாற்றுகின்றன. இந்த ஆயுதங்கள் எவ்வளவு அதிகமாகப் பரவுகிறதோ, அவ்வளவுக்கு தவறுகள், தவறான கணக்கீடுகள் அல்லது திடீர் அதிகரிப்புக்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ரஷ்யாவின் ஆழப்பகுதியை தாக்கும் திறன் கொண்ட தொலைதூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. இது போரை தூண்டும் செயல் என அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் ஒரு ஏவுகணை சோதனை அல்லது தற்செயலான ஏவுதல் கூட ஒரு போர் நடவடிக்கையாகத் தவறாக கருதப்படும். இதன் காரணமாகவே ராஜதந்திர நடவடிக்கையும், தகவல் தொடர்பு மட்டுமே உண்மையான பாதுகாப்பு என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். தெளிவான ஒப்பந்தங்கள், ஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தை போன்றவையே போர் அபாயங்களை குறைக்கும் என்பது நிபுணர்களின் கருத்து.

Tags: WARthird world warWill modern missiles spark World War 3? - Experts warnநவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா?
ShareTweetSendShare
Previous Post

வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை!

Next Post

உயர்வுடன் வர்த்தகமாகிய இந்திய பங்குச்சந்தை!

Related News

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

Load More

அண்மைச் செய்திகள்

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

கொடைக்கானல் : ஸ்டைலாக போட்டோக்கு போஸ் கொடுத்த பெண்ணை விரட்டிய குரங்கு!

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி – உற்சாக வரவேற்பு!

நெல்லை : கையில் தீப ஜோதியுடன் ஸ்கேட்டிங் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

திருத்தணி : வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்!

திருச்சி : சாட்டை துரைமுருகனை கைது செய்யக் கோரி அமமுக நிர்வாகிகள் போராட்டம்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகமாடுகிறார் – நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

நாமக்கல் கிட்னி முறைகேடு விற்பனை : இடைத்தரகர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies