97 தேஜஸ் மார்க் 1-ஏ விமானங்களை தயாரிப்பதன் மூலம், இந்திய விமானப்படை அசைக்க முடியாத அளவுக்கு பலம் பெறப்போகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கையாகப் பழமையான போர் விமானங்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அந்த வகையில், நீண்ட காலமாக எதிரிகளுக்குச் சிம்மசொப்பமனமாக விளங்கிய மிக்-21 ரக போர் விமானங்களுக்கு அண்மையில் பிரியாவிடை அளிக்கப்பட்டது.
மிக்-21 ரக போர் விமானத்திற்கு மாற்றாகத் தேஜஸ் மார்க் 1-ஏ ரக விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 180 விமானங்களைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 46 ஆயிரத்து 800 கோடி செலவில், 83 தேஜஸ் 1-ஏ ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு அடுத்த மாதம், முதல் தொகுப்பு ஒப்படைக்கப்பட உள்ளது இந்நிலையில், கூடுதலாக 97 தேஜஸ் விமானங்களை உற்பத்தி செய்ய, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
66 ஆயிரத்த 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாராகும் தேஜஸ் விமானங்கள், 2027-28 நிதியாண்டு முதல் இந்திய விமானப்படையிடம் படிப்படியாகஒப்படைக்கப்பட உள்ளது. இதில் 68 SINGLE SEAT FIGHTER AIRCRAFT மற்றும் 29 DOUBLE SEAT TRAINER AIRCRAF அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேஜஸ் மார்க் 1-ஏ ரக போர் விமானங்களில், அமெரிக்காவின் 113 GE-404 என்ஜின்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதற்காக அமெரிக்க போர் விமான தயாரிப்பு நிறுவனமான ஜென்ரல் எலக்ட்ரிக் உடன், 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்தாகும் என இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 113 GE-404 என்ஜின்களை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமல்ல, 113 GE-404 என்ஜினின் 80 சதவீத தொழில்நுட்பத்தை வாங்கவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பங்கள் இந்தியாவின் LCA Mk2 மற்றும் Advanced Medium Combat போர் விமானங்களின் திறனை மேம்படுத்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2021-ம் ஆண்டில் தொன்னூற்றி ஒன்பது 113 GE-404 என்ஜின்களை இந்தியா ஆர்டர் செய்துள்ளது. அடுத்த மாதம் 113 மாதம் என்ஜின்கள் ஆர்டர் செய்யப்பட உள்ள நிலையில், இது மிகப்பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இறுதிச்செய்யப்பட்டால், ஆசிய கண்டத்தில் அதிகளவில் 113 GE-404 என்ஜின்களால் இயங்கும் போர் விமானங்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும். சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களையே பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















