இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை ராணுவத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டுமென ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
நேட்டோ அமைப்பில் சேர, உக்ரைன் எடுத்த முயற்சி, ரஷ்யாவை கோபம் அடைய செய்தது. இது தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறிய ரஷ்யா, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது முழு அளவிலான போரை தொடங்கியது.
இதனால் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் இரு நாடுகளுக்கும் இடையே போர் நீடித்து வருகிறது.
இந்தப் போரில் இரு தரப்பிலும் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். ரஷ்யாவுக்கு கூடுதலாக ஆட்கள் தேவைப்படுவதால், வடகொரியாவில் இருந்து ராணுவ வீரர்களை ரஷ்யா இறக்குமதி செய்தது.
இந்தச் சூழலில் இந்த ஆண்டின் இறுதிக்குள் 1 லட்சத்து 60 ஆயிரம் ஆண்களை ராணுவத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டுமென அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.