வெளிநாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
இதனைதொடர்ந்து, உள்ளூர் போட்டியில் வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.