இமய மலைப்பகுதியில் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் நேபாளம் ஈடுபட்டுள்ளது.
மகாலங்கூர் மலைத்தொடரில் அமைந்துள்ளது எவரெஸ்ட் சிகரம். இதன் உயரத்தை முடிவு செய்வதில் அண்டை நாடுகளான சீனாவும், நேபாளமும் போட்டி போட்டன.
இறுதியில், 8 ஆயிரத்து, 848 மீட்டர் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இமய மலைப்பகுதியில் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.