தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை மேம்படுத்தினால் மட்டுமே குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்கும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கரூரில் நடைபெற்ற சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய வடுவாக உள்ளது. வருங்காலத்தில் நடக்கும் அனைத்து கட்சி கூட்டங்களில் கட்டுப்பாடுகளை ளும் கடைபிடிக்க வேண்டும் என்றும், காவல்துறையும் அரசும், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
திருவண்ணாமலையில் பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் போதைபொருள் தடுப்பு மற்றும் சட்ட ஒழுங்கை மேம்படுத்த வேண்டும். இவை இரண்டும் மேம்படுத்தினால் மட்டுமே இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்கும் என ஜி.கே.வாசன் கூறினார்.