எத்தகைய கடினமான சூழல்களையும் தகர்த்தெறிந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு அனைவரின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகள் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை தாம்பரம் ராஜ் கீழ்ப்பாக்கம் பகுதியில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகள், ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டின் அனைத்து இடங்களிலும் சேவை புரிந்து வருவது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார். இந்து சமயத்தை பாதுகாத்தால், இந்திய திருநாடு பாதுகாக்கப்படும் என்று தெரிவித்த அவர், குழந்தைகளுக்கு சமயம் பற்றி சொல்லி தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பக்தியை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகள் வலியுறுத்தினார்.