காசாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களுடன் வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் இருந்த ஐரோப்பிய படகுகளை நடுக்கடலில் இஸ்ரேல் இடைமறித்தது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரால் காசாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், அனைவரும் பசியால் வாடிவருகின்றனர். இதனால் காசா மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து 50 படகுகளில் சுமார் 500 செயற்பாட்டாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் மேற்கொண்டனர்.
இந்தப் படகுகளில் சில புதன்கிழமை இரவு பாலஸ்தீன பிரதேசத்தை அடைந்தது. அதனை இஸ்ரேல் கடற்படையினர் இடைமறித்துள்ளனர்.
அப்போது அந்தப் படகில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க், நெல்சன் மண்டேலாவின் பேரன் ஆகியோர் இருந்தது தெரியவந்தது.