கரூர் துயர சம்பவம் தொடர்பான எந்த கேள்விகளையும் விஜயிடம் சென்று கேளுங்கள், நாங்கள் ஒன்றும் தவெகவுக்கு மார்க்கெட்டிங் அதிகாரிகள் கிடையாது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதை அவர், கரூர் விவகாரத்தில் பேச வேண்டிய விஜய், அமைதியாக இருக்கிறார் என்றும், எந்த கேள்வியாக இருந்தாலும் அவரிடம் சென்று கேளுங்கள் என தெரிவித்தார்.
நாங்கள் ஒன்றும் தவெகவுக்கு மார்க்கெட்டிங் அதிகாரிகள் கிடையாது என்றும், எங்கள் கருத்துகளை நாங்கள் சொல்லிவிட்டோம் அண்ணாமலை கூறினார்.