ஓசூரில் கனமழை காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இரவு முதல் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தொரப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட ஆர்.ஆர்.கார்டன் என்ற தனியார் குடியிருப்பில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் வெளிவே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
கனமழை காரணமாக தொரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரி நிரம்பி தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திப்பாலம் என்ற கிராமத்திற்கு செல்லக்கூடிய தரைபாலமும் மழை நீரால் மூழ்கடிக்கப்பட்டதால் அந்த கிராமத்திற்கு செல்லும் சாலையும் துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.