கடல் தூய்மையை பாதுகாக்க வலியுறுத்தித் தூத்துக்குடியில் அடுத்த மாதம் 15ம் தேதி கடல் அம்மா மாநாடு நடத்தப்படும் எனச் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு சென்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைநகர் பகுதியை சேர்ந்த மீனவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதனையடுத்து படகு மூலம் கடலுக்குச் சென்ற சீமான் அங்குக் கடலின் தன்மையை பார்வையிட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடலின் தூய்மை தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிளாஸ்டிக் கழிவுகள், ஆலைக்கழிவுகள் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கடல் தூய்மையை பாதுகாக்க வலியுறுத்தி அடுத்த மாதம் 15ம் தேதி தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார்.