மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக ஆடி வருகிறது.
அதன் படி முதலாவது டெஸ்ட் தொடர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதனாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங்க் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
இதனையடுத்து நேற்றைய ஆட்டத்தின் தொடர்ச்சியாகக் களமிறங்கிய இந்திய அணி 128 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 448 ரன்களை குவித்ததோடு டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து தனது 2வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.