கொளத்தூரில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர் உயிரிழந்த சம்பவத்தில் இன்னும் எத்தனை உயிர்களைப் பறித்தால் திமுக அரசின் தாகம் தீரும்? என நயினார் நாகேந்திரன் காட்டத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தூய்மைப் பணியாளர்களின் உயிரைத் திமுக அரசு துச்சமெனத் தூக்கி எறிவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
போலி விடியல் ஆட்சியின் விழிகளுக்கு எப்போதுதான் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வு புலனாகும்? எனவும், கார் ரேஸூக்கும் விளம்பர நாடகங்களுக்கும் கோடி கோடியாக செலவழிக்கும் திமுக அரசுக்கு ஏழை தொழிலாளியின் பாதுகாப்பை மேம்படுத்த சில ஆயிரம் ரூபாயில் பாதுகாப்புக் கவசம் வாங்க முடியாதா? எனவும் வினவியுள்ளார்.
தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள் பலியாவது தொடர்கதையாகி வரும் நிலையில் இன்னும் எத்தனை உயிர்களைப் பறித்தால் திராவிட மாடல் அரசின் தாகம் தீரும்? என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், மேடைகளில் மட்டும் சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் திமுக ஆட்சியை தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள் எனவும் சூளுரைத்துள்ளார்.