கரூரில் தவெக பரபரப்பை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கட்சி நிர்வாகிகள் ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
கரூரில் தவெக தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி மேற்கொண்ட பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இருவரும் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் அவர்களது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த முன்ஜாமின் மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்க கோரி, திங்கட்கிழமை முறையிடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.