ஜம்மு-காஷ்மீரில் மழை வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், கிராம மக்கள் ஆட்டோ ரிக்ஷாவை தோளில் சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
உதம்பூர் மாவட்டத்தின் பண்ட் கிராமத்தில் கனமழையால் 10 ஆண்டுகள் பழமையான பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் கிராம மக்கள் ஆற்றைக் கடக்க போக்குவரத்து வசதி இன்றி, ஆட்டோ ரிக்ஷாவையே தோளில் சுமந்து, கரையைக் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
அண்மையில் பெய்த கனமழையால் பாலம் இடிந்து விழுந்த நிலையில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாததால் பண்ட் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.