அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு தொடர்பான வழக்கில் வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாகக் கூறி அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை 2019ம் ஆண்டு, எம்பி, எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் துரைமுருகன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் அக்டோபர் 23ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமெனத் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.