சென்னை கோயம்பேட்டில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக நிர்வாகி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தனியார் விடுதியில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் ஆந்திராவை சேர்ந்த துணை நடிகை உட்பட 6 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் கார்த்திக் என்பவர் தனது வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், பின்னர் விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட சிறுமிக்குத் திமுக நிர்வாகி ரமேஷ் மற்றும் பாரதிக்கண்ணன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததையும் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக இருவரையும் தீவிரமாகத் தேடிவந்த போலீசார் நெசப்பாக்கத்தில் வைத்துக் கைது செய்தனர்.
மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவித்த போலீசார் திமுக நிர்வாகி ரமேஷ் மற்றும் பாரதிக்கண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையிலடைத்துள்ளனர்.