கரூர் விவகாரம் சோகம் தான் என்றும், அதையே பேசிக்கொண்டு இருப்பதால் சோகம் போய்விடாது எனவும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வரும் ராமதாசை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகத் தெரிவித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதால் அவரது மகனை சந்தித்து நலம் விசாரித்ததாக கூறினார்.
கரூர் விவகாரம் குறித்து தினமும் பேசிக்கொண்டு இருக்க வேண்டாம் என்றும், கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், கரூர் விவகாரத்தில் அரசியல் செய்யாமல் இருக்க வேண்டியது நமது கடமை எனக் கமல்ஹாசன் தெரிவித்தார்.