கரூர் துயர சம்பவத்தை திசை திருப்பவே முதலமைச்சர் ஸ்டாலின் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் அளித்த பேட்டியில்,
கரூர் சம்பவத்தை திசை திருப்பவே கச்சத்தீவு விவகாரத்தை முதலமைச்சர் கையிலெடுத்துள்ளார் என்றும் கச்சத்தீவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
கச்சத்தீவை தாரைவார்க்க, அப்போதைய மத்திய அரசுக்குத் திமுக மறைமுகமாக அனுமதி அளித்தது என்றும் “கட்சித்தீவை மீட்பதற்கு பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்” என்று நயினார் நாகேந்திரன் உறுதி பட தெரிவித்தார்.