கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் தவெக பிரசார கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கரூர் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த உமா ஆனந்தன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக கூட்டம் கூடும் எனத் தெரிந்தும் உரிய இடத்தை ஒதுக்காமல் அரசு நிர்வாகம் இருந்ததாகவும், 41 பேர் உயிரிழப்புக்கு அரசே பொறுப்பு எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மனுவை விரைந்து விசாரணை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்பு உமா ஆனந்தன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
பாஜக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும் 10ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தலைமை நீதிபதி உறுதியளித்தார்.