கரூர் சம்பவத்தை திசை திருப்பவே கச்சத்தீவு விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் மட்டுமல்ல, உரிமை மறுக்கப்பட கூடிய அனைவருக்கும் பாஜக துணை நிற்கும்என்றார். கச்சத்தீவு விவகாரத்தில் திமுக தான் துரோகம் செய்தது என்றும், காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என கூறும் வரை கச்சத்தீவு பற்றி பேச திமுகவிற்கு தகுதி இல்லை என அவர் தெரிவித்தார்.