ஒரு ஜிபி டேட்டா ஒரு கப் டீயை விட விலை குறைவு என்றும் நாங்கள் வேகமான சீர்திருத்தங்களை செய்து வருகிறோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய மொபைல் காங்கிரஸ் தொழில்நுட்ப மாநாடு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த நேரம் இது என்றும், புதுமைகளை இந்தியாவில் உருவாக்குங்கள் என்றும் கூறினார்.
மத்திய அரசு வேகமான சீர்திருத்தங்களை செய்து வருவதாகக் கூறிய பிரதமர், ஒரு காலத்தில் 2G தொழில்நுட்பத்தில் சிரமப்பட்ட இந்தியா, தற்போது கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி மொபைல் டேட்டா இணைப்பு வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
வரும் 2030ஆம் ஆண்டிற்குள் 6-ஜி என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் என்று கூறிய பிரதமர், இது இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு முக்கிய மைல்கல் என்று கூறினார்.