கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில், தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிலையில், தவெக தலைவர் விஜய் நேரில் செல்லவில்லை என சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க அனுமதி கோரி அக்கட்சியின் வழக்கறிஞர் அறிவழகன் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சந்திப்பதற்கு அனுமதி கேட்டும், அதற்குரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.