கோவை விமான நிலையத்தில் திமுக அமைச்சர்களை பார்த்த அதிமுக நிர்வாகிகள் இபிஎஸ் வாழ்க என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் இன்று மாலை “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பிரசாரம் செய்ய உள்ளார்.
அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏராளமான அதிமுக தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.
அப்போது, கோவையில் நாளை முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், காந்தி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரை பார்த்ததும் அதிமுக நிர்வாகிகள் இபிஎஸ் வாழ்க என முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது.