திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை காணப்பட்டது. இந்நிலையில் திடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் குளிர்ந்த கால நிலை ஏற்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் உருளைக்கிழங்கு, முள்ளங்கி, கேரட், பீட்ரூட் போன்ற பயிர்களுக்கு ஏற்றது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொடைக்கானலில் உள்ள நீர்த்தேக்கங்களும் கனமழையின் காரணமாக நிறைந்து காணப்படுகின்றன. கொடைக்கானலில் குளிர்ந்த கால நிலை காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.