சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே முத்தாலம்மன் கோயிலில் சாத்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
வலசைப்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாத்திரை திருவிழா என்ற வினோதா திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை முசுண்டபட்டி கிராமத்தில் மண்ணால் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலையைப் பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலுக்குள் வைத்தனர்.
இந்நிலையில், கோயிலில் இருந்து முத்தாலம்மன் சிலையைத் தோளில் ஊர்வலமாகக் கொண்டு சென்று பக்தர்கள் வழிபட்டனர்.