கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகச் சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடந்து 5-வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்த, வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஐந்து காவல் ஆய்வாளர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், கரூர் சுற்றுலா மாளிகையில் முகாமிட்டு 5வது நாளாக பலருக்கு சம்மன் அனுப்பி பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.