நெல்லை மக்களின் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலம், திறக்கப்பட்ட ஒரே ஆண்டில் மோசமடைந்ததால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
நெல்லை தியாகராஜ நகர் ரயில்வே கேட் பகுதியில் ஏற்பட்ட தொடர் போக்குவரத்து நெரிசலால் அவதிக்குள்ளான மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேம்பால பணிகளை முடிக்க வைத்தனர்
. இந்த ரயில்வே மேம்பாலம் கடந்த ஆண்டுதான் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் அதற்குள்ளாகவே அந்த மேம்பாலம் குண்டும் குழியுமாகக் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் பொதுமக்கள் மீண்டும் கவலையடைந்துள்ளனர்.
குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர், தகடுகளில் மோதி நிலைதடுமாறி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.