மதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பட்டியலின இளைஞர் மரணத்திற்கு நீதிக்கேட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை யாகப்பா நகரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் மீது சில குற்ற வழக்குகள் உள்ள நிலையில், அதிகாலை அவரது வீட்டிற்கு சென்ற அண்ணா நகர் காவல் நிலைய போலீசார் தினேஷ் உட்பட 3 பேரை பிடித்து புறக்காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.
பின்னர், அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது தினேஷ்குமார் தப்பியோடியதாக கூறப்படுகிறது. போலீசார் துரத்தியபோது அருகே உள்ள உபரிநீர் கால்வாயில் குதித்து தினேஷ்குமார் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறுகின்றனர்.
இதனிடையே, தினேஷ்குமாரை அடித்துக் கொன்றதாகவும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் காவல்நிலையம் முன் உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.