மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி மந்தை கருப்பண சுவாமி கோயிலை அறநிலையத்துறை அபகரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராம மக்கள் தொன்று தொட்டு வழிபட்டு வரும் மந்தை கருப்பண சுவாமி கோயிலில் தற்போது கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது எனக்கூறி, அனுமதியின்றி திருப்பணிகள் செய்யக்கூடாது என்றும் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.
முன்னோர்கள் வழிபட்டு வந்த கருப்பண்ண சுவாமி கோயிலை அறநிலையத்துறை அபகரிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி, கிராம மக்கள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, தங்களின் வழிபாட்டு உரிமையை அறநிலையத்துறைக்கு ஒப்படைக்க முடியாது” என்றும், இந்த நடவடிக்கைக்கு உரிய விளக்கம் கேட்ட பிறகு அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.