தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொள்வதற்காகச் சாணி பவுடருடன் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லாயல் மில் காலனி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை கற்பகவல்லி, புதிய வீட்டிற்கு மின் இணைப்பு கோரி பலமுறை மனு அளித்ததாகவும், ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதையொட்டி அவர் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து மின் இணைப்பு வழங்கவில்லை எனில், தான் கொண்டு வந்திருந்த சாணி பவுடரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்.
இதையடுத்து அங்கிருந்த காவலர்கள், சாணி பவுடர் தண்ணீரை கீழே ஊற்ற வைத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.