கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பேருந்தில் திடீரெனப் பிரேக் பிடிக்காததால் சாலையோர தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
நாகர்கோவிலிலிருந்து முள்ளூர்துறையை நோக்கி அரசுப் பேருந்து புறப்படத் தயாராக இருந்தது.
ஓட்டுநர் பேருந்தை ரிவர்ஸ் எடுத்தபோது திடீரெனப் பிரேக் பிடிக்காததால் சாலையோர தடுப்புச்சுவர் மீது பேருந்து மோதி நின்றது.
இதையடுத்து மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அதில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் இழுவை வாகனம் மூலம் பேருந்து அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.