தூங்குவதற்கு முன்பு பல் துலக்கவில்லை என்றால் இருதய ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
வேலை செய்த அலுப்பில் இரவு உணவை சாப்பிட்டவுடன் படுக்கையில் சாய்ந்துவிடுவதே வழக்கமாக இருக்கிறது.
ஆனால் உறங்கச் செல்வதற்கு முன்பு பல் துலக்கவது நல்லது எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள மருத்துவர் சூட், வாய் சுகாதாரம் அவசியம் எனவும் இரவில் பல் துலக்கவில்லை என்றால் வாய்வழி பாக்டீரியாக்கள் ஒரே இரவில் தங்கி இதய பாதிப்புக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மோசமான வாய் சுகாதாரம், இதயநோய் மற்றும் இதய செயலிழப்புக்கான அதிக ஆபத்தைக் கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் எனவும் மருத்துவர் சூட் தெரிவித்துள்ளார்.