அசாதாரண அரசியல் சூழல் காரணமாக ராஜினாமா செய்த பிரான்ஸ் பிரதமரை, அதிபர் மேக்ரான் 4 நாட்களுக்குள் மீண்டும் பிரதமராக நியமியத்துள்ளார்.
நிச்சயமற்ற அரசியல் சூழல் நிலவி வரும் பிரான்ஸின் புதிய பிரதமராக, அண்மையில் செபாஸ்டியன் லெகோர்னு பதவியேற்றார்.
அடுத்த ஆண்டு சிக்கண பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஏதுவாக, பிளவுபட்ட பாராளுமன்றத்தின் அனுமதியை பெற கடினமான சூழல்களை லெகோர்னு எதிர்கொண்டார்.
இதனால் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக லெகோர்னு அறிவித்தார். அவருடன் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தீவிர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட நிலையில், 4 நாட்களுக்குப் பின் மீண்டும் செபாஸ்டியன் லெகோர்னு பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.