சர்வதேச இடம்பெயரும் பறவை தினத்தை ஒட்டிக் கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத்துறை மற்றும் தன்னார்வ அமைப்பு சார்பில் பறவைகள் கண்காணிப்பு பணி நடைபெற்றது.
புலம்பெயரும் பறவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவற்றைப் பாதுகாக்கவும் சர்வதேச அளவில் இடம்பெயரும் பறவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அந்தவகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பறவைகள் கண்காணிப்பு பணிகள் வனத்துறை சார்பில் நடைபெற்றது.
இதில் ரஷ்யா, சவுதி அரேபியா, ஆர்டிக் பகுதிகளில் இருந்து கொசு உள்ளான், செங்கழுத்து கொசு உள்ளான் மற்றும் கொண்டை பறவைகள் உள்ள ஏராளமான பறவைகள் தென்பட்டுள்ளன. இதனை, ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பறவைகள் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.