தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரை பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
அனில் அம்பானிக்கு சொந்தமான ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு ‘யெஸ்’ வங்கி 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியது.
ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன் சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர் விசாரணையில் அனில் அம்பானி 17 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
அதனை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, அனில் அம்பானிக்கு சொந்தமான 35-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழும நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.