பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார்.
முதல்கட்டமாக 121 இடங்களுக்கு நவம்பர் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் இன்று முதல் வரும் அக்டோபர் 17-ம் தேதிவரை தாக்கல் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 20 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.