ரத்ததானம் செய்வதில் முன்னோடியாகத் திகழும் R.S.S – H.S.S BLOOD DONORS BUREAU அமைப்பிற்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ரத்ததானம் செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாகத் தன்னார்வ ரத்ததான முகாம் அமைப்பாளர்கள், 50 முறைக்குமேல் ரத்த தானம் செய்த தன்னார்வலர்கள், இணையதளத்தில் பதிவு செய்த தன்னார்வ ரத்த கொடையாளர்களுக்கு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் ரத்ததானம் செய்வதில் முன்னோடியாக விளங்கும் R.S.S – H.S.S அமைப்பிற்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.