தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் சோம சுந்தரம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குனர் சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். கொசு உற்பத்தியை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அதேபோல் கொசுக்கள் அதிகமாக உள்ள இடங்களில் மருந்து தெளிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் சோமசுந்தரம் தெரிவித்தார்.