தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, தென்காசி மற்றும்
மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளைய தினம் கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும். நாளை மறுநாள் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
வரும் 17ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் எனவும். சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.