மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலால் 8 பேர் காயமடைந்தனர்.
பர்தமான் ரயில் நிலையத்தின் 4 மற்றும் 5 ஆவது நடைமேடைகளில் ஒரே நேரத்தில் ரயில்கள் வந்தன. அப்போது ரயில்களில் ஏறவும், இறங்கவும் பயணிகள் முண்டியடித்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பலர் கீழே விழுந்ததில், நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர். தொடர்ந்து காயமடைந்தவர்களுக்கு ரயில்வே மருத்துவர்கள் முதலுதவி அளித்தபின்னர் சிகிச்சைக்காகப் பர்தாமன் மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு சென்றனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.