குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பெரும் மனித உரிமை மீறல்களில் இருந்து உலகின் கவனத்தைத் திசைதிருப்ப பாகிஸ்தான் முயல்வதாகப் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கண்டித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை அமர்வில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்களின் உயிரைப் பறித்த, பாகிஸ்தானால் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலை, சர்வதேச சமூகம் மறக்கவில்லை என்று கூறினார்.
இதற்குப் பதிலடியாக கடந்த மே மாதம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி, பயங்கரவாதத்திற்கு எதிராகத் தனது மக்களைப் பாதுகாக்கவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் இந்தியா தனது நியாயமான உரிமையைப் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு நேர்மாறாக, பாகிஸ்தான் இந்திய எல்லைக் கிராமங்களை குறிவைத்தது தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
ஐ.நா. மேடையில் பிரசிங்கப்பதைப் பாகிஸ்தான் நிறுத்தி, தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.
தங்கள் எல்லைகளுக்குள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பெரும் மனித உரிமை மீறல்களில் இருந்து உலகின் கவனத்தைத் திசைதிருப்ப முயலும் பாகிஸ்தானின் முயற்சியைத் தீவிரமாக கண்டிப்பதாகவும் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்தார்.