காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரச்சாரம் செய்தார். அப்போது மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்த நயினார் நாகேந்திரனுக்குச் செண்டை மேளம் முழங்க பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்குப் பிரமாண்ட மாலை அணிவித்தும் செங்கோல் வழங்கியும் சிவகங்கை மாவட்ட பாஜகவினர் கெளரவித்தனர்.