கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அஜய் ரஸ்தோகி நியமிக்கப்பட்டுள்ளதால் விசாரணை முக்கியவத்தும் பெற்றுள்ளது.
கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இந்த வழக்கு விசாரணையை மேற்பார்வையிட உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜஸ் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
1958ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி ஜெய்பூரில் பிறந்த அஜஸ் ரஸ்தோகி, 1990ம் ஆண்டு ராஜஸ்தான் உயர்நீதிமன்ற ஆலோசகராக இருந்து, 2004ம் ஆண்டு நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
பல்வேறு நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றிய இவர், 158 வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கி உள்ளார்.
ஜல்லிக்கட்டு வழக்கு, முத்தலாக், கருணைக் கொலை உரிமைக்கு ஆதரவாகத் தீர்ப்புகளை வழங்கியவர் என்பதால், கரூர் வழக்கு குறித்து தொடங்க போகும் விசாரணை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.