நெல்லைப் பாளையங்கோட்டை பழைய மார்க்கெட் நுழைவு வாயிலில் திடீரெனப் பள்ளம் தோண்டப்பட்டதால் வியாபாரிகள் குழப்பமடைந்தனர்.
பாளையங்கோட்டைப் பழைய மார்க்கெட் பகுதியின் நுழைவு வாயிலில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், பள்ளத்தைத் தோண்டியது மாநகராட்சியின் செயல்தான் எனக் குற்றஞ்சாட்டினர். மேலும், புதிதாகத் திறக்கப்பட்ட வணிக வளாகத்திற்குச் செல்லாததால் அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் தெரிவித்தனர்.
வியாபாரிகளின் குற்றச்சாட்டை மறுத்த மாநகராட்சி நிர்வாகம், எந்தப் பள்ளமும் தோண்டப்படவில்லை என விளக்கம் அளித்தனர்.
இதுதொடர்பாக நடந்த விசாரணையில், ஏற்கனவே புதிய மார்க்கெட்டிற்கு மாறிச் சென்ற வியாபாரி ஒருவர், பிற வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்த பள்ளம் தோண்டியது தெரியவந்தது.
இதனை உறுதிபடுத்தியுள்ள மாநகராட்சி அதிகாரிகள், புதிய மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் மாறும் பணி சுமூகமாகத் தொடரும் எனத் தெரிவித்தனர்.