விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான ஆங்கில மொழியறிவு தேர்வுகளைக் கடுமையாக்குவதற்கான மசோதாவைப் பிரிட்டன் அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.
நாட்டில் வெகுவாக அதிகரித்து வரும் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகப் பிரிட்டன் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் புதிய பாதுகாப்பான ஆங்கில மொழித் தேர்வு உள்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பால் நடத்தப்படும்.
விசாவுக்காக விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது, கேட்பது, வாசிப்பது, எழுதுவது ஆகியவை அனைத்தும் பிரிட்டனில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவரின் அளவுக்கு இருக்க வேண்டும்.
இது பிரிட்டன் வரும் வெளிநாட்டினர்ச் சிறப்பான முறையில் அனைவருடனும் உரையாடி சமூகத்தில் ஒருங்கிணைய உதவும் என உள்துறை அமைச்சகம் கருதுகிறது.
பிரிட்டன் வருபவர்கள் தங்கள் மொழியைக் கற்றிருக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்களால் நாட்டு வளர்ச்சியில் பங்களிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.