கரூர் துயரம், கிட்னி திருட்டு உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்துவந்த அதிமுக உறுப்பினர்களை, அமைச்சர் ரகுபதி சிறைவாசிகளோடு ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொட்டரின் 2-ம் நாளாக இன்று, கரூர் துயர சம்பவம், கிட்னி திருட்டு உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். இதைக் கண்ட சபாநாயகர் அப்பாவு, அதிமுகவினருக்கு ஒரே நேரத்தில் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதா? என கேலி செய்தார்.
இதைத்தொடர்ந்து அவையில் பேசிய அமைச்சர் ரகுபதி, சிறைவாசிகளுக்கு சிறையில் அடையாளம் கொடுப்பதைபோல தனி அடையாளத்தோடு அதிமுக உறுப்பினர்கள் வந்திருப்பதாக விமர்சித்தார். அதிமுகவினரை சிறைவாசிகளோடு ஒப்பிட்டு அவர் பேசியது அவையில் சர்ச்சையை ஏற்படுத்தியது.